விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தில், மமிதா பைஜூ முதன்முறையாக முழுமையான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “இதுவரை நான் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் மாடர்ன் மற்றும் சுறுசுறுப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் ‘கர’ படத்தில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்து பெண்ணாக முதன்முறையாக நடித்துள்ளேன். இந்த படத்தில் என் கேரக்டர், உடை, பேச்சு மற்றும் தோற்றம் அனைத்தும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
சிறுவயதிலிருந்து தனுஷ் நடித்த படங்களை பார்த்து வளர்ந்தேன். அவருடன் ஜோடியாக நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் போன்றவர். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். மேலும், அவர் தனது சக நடிகர்களுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்து அவர்களை ஊக்குவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
—
