‘ராக்கா’ படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக 4 மணி நேரம் வரை தினமும் மேக்கப் போடும் அல்லு அர்ஜுன்?

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன், தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்துவருகிறார். மேலும், கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

அதிநவீன VFX தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே அதற்கு உடனடியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, அல்லு அர்ஜூனின் சிக்னேச்சர் கை அசைவை மீண்டும் உருவாக்கியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது, ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய தோற்றம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனது வழக்கமான நடிப்பு பாணியிலிருந்து விலகி, ‘புஷ்பா’ படத்தைப் போலவே மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அந்த புதிய லுக் படத்தில் முக்கியமானதாக அமைகிறது என கூறப்படுகிறது. அந்த தோற்றத்தை உருவாக்க தினமும் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை செலவிட வேண்டியதாக இருக்கிறதாம். அல்லு அர்ஜூனின் 22வது படமாக உருவாகும் இந்த ‘ராக்கா’ திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், திரிவிக்ரம் மற்றும் பேசில் ஜோசப் ஆகியோரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading