பேட்லர்ஸ் சினிமா நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கிய ‘வல்லமை’ திரைப்படத்தில் நடிகர் பிரேம்ஜி நடித்திருந்தார். தற்போது, அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் மியூசிக்கல் ஹாரர் வகையில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய திரைப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி இசையமைப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனத்தின் சார்பில் கருப்பையா முருகன் எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார்.
தற்போது, இப்படத்திற்கான பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
—
