தனுஷின் ‘D56’ படத்தில் இணைகிறாரா நடிகை சாரா அர்ஜூன்?

நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 55வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அவரது 56வது திரைப்படமும் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ருக்மணி வசந்த் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டாலும், தற்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் இணையும் திரைப்படத்திற்காக முழு கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளார். இதனால், இந்தப் படத்திற்கான அவரது கால்ஷீட்டை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ருக்மணி வசந்த் இந்தப் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று திட்டமாக வேறு நடிகையையும் தேர்வு செய்ய படக்குழு ஆலோசித்து வருகிறது. அந்த வகையில், ‘தெய்வதிருமகள்’ மற்றும் ‘சைவம்’ திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தும், சமீபத்தில் ‘தூரந்தர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாரா அர்ஜுனுடன் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading