சின்னத்திரை நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகும் ‘தமிழினி’

புதிய இயக்குநர்களான டி.பி. சரவணன் மற்றும் கணேஷ் மூர்த்தி இணைந்து ‘தமிழினி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தில் தீபா சங்கர், திருப்பாச்சி பெஞ்சமின் மற்றும் ‘சத்ரியன்’ திரைப்படத்தில் நடித்த வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், சின்னத்திரை தொகுப்பாளராக அறியப்படும் ஆசிக் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும், ‘ராயல் சல்யூட்’ திரைப்படத்தில் நடித்த பிரதீப் ராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ‘ரத்னம்’, ‘டீசல்’ திரைப்படங்களில் நடித்த ஷாஷா சிவகுமார் மற்றும் ‘அன்பெனும் ஆயுதம்’ வெப்சீரிஸில் நடித்த புஷ்ப லதா நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர்கள் கூறியதாவது, “மீனவ மக்களின் வாழ்க்கையை மிகவும் இயல்பாகவும் உண்மையுடனும் எடுத்துரைக்கும் கதை இது. தென் மாவட்ட கடலோரப் பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு உள்ளிட்ட இடங்களில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தனர். மேலும், இந்தப் படத்திற்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் புகழ்பெற்ற சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு இனிமையான காதல் பாடலை பாடியுள்ளனர் என்றும் கூறினர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading