நடிகர் ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் தனது நடிப்பை நிறைவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘ஜீனி’ என்ற மற்றொரு திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். மேலும், நடிகர் யோகி பாபுவை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கியும் வருகிறார். இதற்கு கூடுதலாக, ‘ப்ரோ கோட்’ திரைப்படத்திலும் அவர் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ரவி மோகனின் புதிய திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஷியாம் குமார் இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். மேலும், இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
—
