கவனத்தை ஈர்க்கும் இயக்குனர் ரத்னகுமாரின் ’29’ படத்தின் ‘பூ’ வீடியோ பாடல்!

‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அதன் பின்னர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கியதுடன், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியும் கவனம் பெற்றுள்ளார்.

தற்போது, கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘29’ திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘29’ திரைப்படத்தின் ‘பூ’ என்ற வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் ரத்னகுமார் எழுதியுள்ள நிலையில், பாடகர் ரவி அதை பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading