ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய இரு திரைப்படங்களும் அதிரடி வகை படங்களாக இருப்பதால், அடுத்த படத்தில் பொதுமக்களை கவரும் வகையில் நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். ஆனால் சில காரணங்களால் சுந்தர் சி அந்த திட்டத்திலிருந்து விலகியதால், அந்தப் படத்தை இயக்குவதற்காக சிபி சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில் வெளியான அறிவிப்பு காணொளியும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் அந்தத் திட்டத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக அஷ்வத் மாரிமுத்து இந்த 173வது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு புதிய தகவல் உலாவுகிறது. தொடர்ந்து இரண்டு இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல் ரசிகர்களிடையே குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
