தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் பிரக்யா ஜெய்ஸ்வால், ‘அகண்டா – 2’ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘டைசன் நாயுடு’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து வரும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அவர் விரைவில் தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சுகள் பரவி வருகின்றன.இதற்கிடையில், மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள பிரக்யா ஜெய்ஸ்வால், பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ரசிகர்களுடன் நடந்த உரையாடலில், “ஆடை சுதந்திரத்தை நான் எப்போதும் தவறாக பயன்படுத்தியதில்லை, அதைப் பயன்படுத்தவும் மாட்டேன். இந்திய பண்பாட்டை மீறும் விதமாக நான் நடந்து கொண்டதில்லை. அதே சமயம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப உடை அணிவது தவறல்ல. இது கலாசாரத்தை மீறுவது அல்ல,” என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், தமிழ் சினிமா குறித்து அவர் தெரிவித்த கருத்தும் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடித்தது. பலமுறை தமிழகம் வந்துள்ளேன். அங்குள்ள ரசிகர்களின் ரசனை மிக உயர்ந்தது. தமிழ் திரைப்படங்களில் நடிக்க எனக்கும் விருப்பம் உள்ளது. அதற்காக காத்திருக்கிறேன். சரியான நேரம் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்,” என்று கூறியுள்ளார்.
