என்னை வாழவைக்கும் சினிமாவுக்காக எந்த அளவிற்கும் உழைக்கத் தயார் – நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகையாக விளங்கும் சாக்ஷி அகர்வால், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தொழிலதிபர் நவ்நீத் கிஷோரை திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்திற்குப் பிறகும் தனது நடிப்பு பயணத்தை தொடர்கிறார்.

தற்போது ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் ‘தீயோர் கூடம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் டேனியல் ஆனி போப், வையாபுரி, ஜாவா சுந்தரேசன், வசந்தி, ஜேஸ்பர், சத்யா, சம்யுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். குற்றம் மற்றும் பரபரப்பை மையமாகக் கொண்ட இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை முன்னணி இசையமைப்பாளர் தேவா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில், “என் திரைப்பட பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். என்னை வாழவைக்கும் சினிமாவுக்காக எந்த அளவிற்கும் உழைக்கத் தயார். திருமணம் என்பது நடிகைகளின் பயணத்திற்கு தடையாக இருக்காது. தொடர்ந்து கடின உழைப்பின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெறுவேன்” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading