அதிர வைக்கும் சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட இந்த படம், தற்போது மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாக உள்ளது. மேலும், ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ திரைப்படமும் உருவாகி வருகிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு வெளியான ‘காட் மோட்’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலானது. அதனைத் தொடர்ந்து ‘நாங்க நாலு பேரு’ பாடலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ராத்து ராசன்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ள நிலையில், சாய் அபயங்கர், வி.எம். மகாலிங்கம் மற்றும் பால் டப்பா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading