காதல் மட்டுமே வாழ்க்கையின் அனைத்தும் அல்ல… தத்துவம் சொன்ன நடிகை த்ரிஷா!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் திரிஷா. தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் தொடர்ந்து பயணித்து வருகிறார். 

தற்போது, நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  நடிகை த்ரிஷா குறித்து சமீபத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காதல் குறித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அதில், “காதல் மட்டுமே வாழ்க்கையின் அனைத்தும் அல்ல; ஆனால், காதல் இல்லாமல் எதுவும் முழுமையான அர்த்தத்தை பெறாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading