பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்பட உலகங்களில் தனித்த அடையாளம் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ எனும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் ஐதராபாத் சென்றடைந்தார் பிரியங்கா சோப்ரா.
ஐதராபாத் நகரில் இந்நாட்களில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தினசரி வெப்பநிலை 35 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று படப்பிடிப்பு இல்லாததால், தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் தனது தோழியுடன் மகிழ்ச்சியாக நீராடிய தருணங்களை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார்.
நீச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மிளகாய் பொடி தூவிய மாங்காயையும் சுவைத்து அந்த நாளை சிறப்பாகக் கழித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த ஞாயிறு உண்மையிலேயே ஒரு ஞாயிறாக உணரப்பட்ட ஒரு தருணமாக இருந்தது. மேலும் பல அனுபவங்களும் அதனுடன் இணைந்திருந்தன என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
