கடலுக்குள் சென்று ஸ்கூபா டைவிங் செய்து அசத்திய நடிகை சோபிதா துலிபாலா!

பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா. கடந்த 2024ஆம் ஆண்டு, அவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஒரு ஆண்டுக்காலம் ஓய்வெடுத்திருந்த சோபிதா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார் என்ற தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், தனது விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அவர் கடலுக்குள் சென்று ஸ்கூபா டைவிங் செய்து மகிழ்ந்துள்ளார். ஆழ்கடலில் படகின் மூலம் சென்று இந்த அனுபவத்தை அவர் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஸ்கூபா டைவிங் செய்த தருணங்களையும், கடலின் அடியில் காணப்படும் மீன்கள் மற்றும் இயற்கை வளங்களை வீடியோவாக பதிவு செய்ததையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவுகள் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading