இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க மலையாள நடிகர் மோகன்லால் ஐதராபாத் சென்றிருந்தார். தொடர்ந்து சில நாட்கள் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு தற்போது அவை நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த இரண்டாம் பாகத்திலும் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இதனுடன், ஹிந்தி நடிகர் ஷாரூக் கானும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
