கிழிந்த ஆடையில் ஸ்டைலாக வந்த அக்ஷய் குமார்… வைரலாகும் புகைப்படம்!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் அக்ஷய் குமார் நடிப்பில், இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூத் பங்களா’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்திருந்த சட்டை தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த சட்டை கிழிந்த வடிவமைப்புடன், இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பும் பாணியில் இருந்ததால், அது ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது.

இந்த விசித்திரமான உடைத் தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஒருவரோ, “எவ்வளவு செல்வம் இருந்தாலும், ஒரு நல்ல சட்டையை வாங்க முடியாத நிலை வந்துவிட்டதா?” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். எப்படியாயினும், இந்த புரமோஷன் நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பேசப்படும் விஷயமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அக்ஷய் குமார் எடுத்த இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading