நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஆனந்த் பாபு!

சிசிசி பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள ‘லைப் பைலட்’ திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் வரிகளை எழுதியதுடன், அதை இயக்கியும் தயாரித்தும் இருப்பவர் சைதன்யா சங்கரன் ஆவார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் ஆனந்தபாபு இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

இந்த படத்தின் மூலம் சஜிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் மகாநதி சங்கர், தீபக் நம்பியார், சூர்யா, சோனியா, அனு பிரென்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜான் விக்டர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாலச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் சைதன்யா சங்கரன் தெரிவித்ததாவது, “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழும் நிஜங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது” என்றார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading