நாகர்ஜூனாவின் 100வது படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்!

சமீபத்தில் வெளியான ‘குபேரா’ மற்றும் ‘கூலி’ திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர் நாகார்ஜுனா, அடுத்ததாக தனது 100வது திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். இந்த படத்தை ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘கிங் 100’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு கதாபாத்திரங்களில் தோன்றுவார்கள் என்றும், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த படத்தில் நாகார்ஜுனா 25 வயது முதல் 60 வயது வரை பல்வேறு வயதுகளைக் கொண்ட தோற்றங்களில் திரையில் தோன்ற உள்ளார். இதற்காக அதிநவீன ‘டி-ஏஜிங்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சி காரணமாக, அவரது 100வது படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading