சிவராஜ்குமாருடன் நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் – அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி!

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், அடுத்ததாக ‘வித் லவ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து கவுதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஷிவானி நாகரம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிவராஜ்குமாருடன் நடித்த அனுபவம் குறித்து அபிஷன் ஜீவிந்த் கூறுகையில், திரையில் பார்த்து ரசித்த ஒரு நடிகருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதை தனது வாழ்நாள் அதிர்ஷ்டமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். சிவராஜ்குமாரின் நீண்டகால அனுபவம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து கொண்டாடும் படமாக ‘பிக்காசோ’ இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading