துரந்தர் 2 படத்தில் கவனிக்க மறந்த பிழை, உடனடியாக சரி செய்த இயக்குனர் ஆதித்யா தர்!

ஹிந்தி திரைப்பட உலகில் கடந்த நவம்பர் மாதம் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, 1300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியது. 

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான ‘துரந்தர்-2’ திரைப்படம், முதல் பாகத்தை விட அதிக வரவேற்பைப் பெற்று, வெளியான முதல் 10 நாட்களிலேயே 1300 கோடி வசூலை எளிதில் கடந்துள்ளது.

இந்த நிலையில், படம் பார்த்த சில ரசிகர்கள், ரன்வீர் சிங் மற்றும் உதய்பிர் சந்து ஆகியோருக்கு இடையே நடைபெறும் சண்டைக் காட்சியில், கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றும் ஒரு பிரேமில், படத்தின் ஒளிப்பதிவாளர் நிழல் உருவம் தவறுதலாக பதிவாகியிருப்பதை கவனித்து, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது பெரிதாக பேசப்பட்ட நிலையில், இயக்குநர் ஆதித்யா தர் உடனடியாக அந்த காட்சியை திருத்தி, புதிய பதிப்புகளை திரையரங்குகளுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading