சூர்யாவின் 47-வது திரைப்படத்தை மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ழகரம் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சூர்யா 47 படத்திற்கு சீன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியாகியுள்ளது.இதனுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ‘சீன்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத்’, ‘அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் சூர்யாவுக்கு வெளியாகும் மூன்றாவது படமாக இது அமைகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
