ரசிகர்களை கவரும் வகையில் சிறந்த நடிப்பை வழங்க முயற்சி செய்வேன்… புதுமுக நடிகை டி.இமயா

அறிமுக இயக்குநர் கிஷோர்குமார் இயக்கத்தில் ‘ஹார்ட்டின்’ என்ற புதிய திரைப்படம் தயாராகியுள்ளது. ‘டிமாண்டி காலனி’, ‘பேட்ட’, ‘மகான்’ போன்ற படங்களில் நடித்துத் தனது திறமையை வெளிப்படுத்திய சனந்த் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் கதாநாயகியாக நடித்துள்ளதுடன், படத்தின் இன்னொரு முக்கிய கதாநாயகியாக டி. இமயா அறிமுகமாகிறார்.

இவர், தமிழக அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் ஆவார். அமெரிக்காவில் திரைக்கதை தொடர்பான கல்வியை முடித்த இவர், சென்னை திரும்பியதும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். ஆடிஷன் மூலம் தனது திறமையை நிரூபித்து இந்த படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டதுடன், படத்தின் திரைக்கதை பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த ‘ஹார்ட்டின்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், இதில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக இமயா அமைச்சர் மகள் என்ற பெருமையை வெளிப்படுத்தாமல் மிக எளிமையாக பழகி அனைவரையும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இதைப் பற்றி நடிகை இமயா கூறுகையில், “சினிமா எனக்கு மிகவும் பிடித்த துறை. அதில் கதாநாயகியாக அறிமுகமாகும் இந்த வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ரசிகர்களை கவரும் வகையில் சிறந்த நடிப்பை வழங்க முயற்சி செய்வேன். தொடர்ந்து கடினமாக உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading