தனது காதலரான சாய் ரோஷன் ஷாமை கரம் பிடித்த நடிகை ஜனனி!

நடிகை ஜனனி தனது காதலரான சாய் ரோஷன் ஷாமை திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு திரையுலகில் உள்ள பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜனனி, அதன்பின் ‘தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பலூன்’, ‘பஹீரா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ஜனனிக்கும், துபாயில் விமானியாக பணியாற்றி வரும் சாய் ரோஷன் ஷாமுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, குடும்பத்தினரும் மற்றும் திரையுலகில் நெருக்கமான நண்பர்களும் முன்னிலையில் இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் பலரும் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தியுள்ளனர். மேலும், ஜனனி தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply