ஜெயசூர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காத்தனார் தி வைல்ட் சோர்சரர்’ திரைப்படம், ‘ஹோம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு Rojin Thomas இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து காத்தனாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மந்திர சக்திகள் கொண்டவர் எனக் கூறப்படும் பின்னணியை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்தக் கதை.
சுமார் 75 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை Sree Gokulam Movies நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வருவதுடன், மலையாளம் மட்டும் அல்லாமல் மொத்தம் 15 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பேன்டஸி மற்றும் திரில்லர் அம்சங்கள் இணைந்த இந்தப் படத்தின் டீஸர் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். வெளியான இந்த டீஸர் டிரெய்லர் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
