தமிழ் திரைப்படமான ‘இருவர் உள்ளம்’ படத்தின் மூலம் அறிமுகமான பாயல் ராஜ்புட், அதன் பின்னர் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக நடித்து வருகிறார். தற்போது லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து பாயல் ராஜ்புட் கூறுகையில், “சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள மக்களின் அன்பும், உணவுகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. குறிப்பாக இட்லி, தோசை, சாம்பார், வத்தக்குழம்பு போன்ற உணவுகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. மேலும், சினிமாவை நோக்கி இங்குள்ள மக்கள் காட்டும் பாசமும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் வியக்க வைக்கிறது.
இது ஒரு சாதாரண மேடை அல்ல, புனிதமான இடமாக நான் கருதுகிறேன். ரஜினி, கமல், ஸ்ரீதேவி போன்ற பல சாதனைகளை நிகழ்த்திய முன்னணி நடிகர்கள் உருவான மண் இது. இவ்வாறான ஒரு சிறப்புமிக்க இடத்தில் நானும் நிற்பது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
