நடிகர் அருள்தாஸ் நடித்துள்ள ‘ரீ யூனியன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறியப்படும் அருள்தாஸ், தற்போது கதாநாயகனாக ‘ரீ யூனியன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சாட்ஸ் ரெக்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன், சுப்பிரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், காக்காமுட்டை ரமேஷ், பூவையார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு விக்கி மேக் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், ராக்கி டிஜே இசையமைத்துள்ளார். ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading