மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனம் தமிழிலும் தனது குட் பேட் அக்லி மற்றும் டியூட் போன்ற படங்களை தயாரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து தமிழில் மேலும் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழில் இந்தியன் 2, கூலி, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ரிஷிகாந்த் அவர்களை கதாநாயகனாக வைத்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அனிஷ்மா அனில் குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடைசியாக நடிகை அனிஷ்மா சிறை, யூத் ஆகிய திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
