ஆஸ்கர் விருது விழாவில் நடைபெறவுள்ள புதிய மாற்றம்!

திரையுலகில் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது உலகம் முழுவதும் உள்ள திரைப்படக் கலைஞர்களின் கனவாகும். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

2002ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டர் அரங்கில் இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது அந்த இடத்தில் நடைபெறும் ஒப்பந்த காலம் முடிவுக்கு வருவதால், 2029ஆம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருது விழா புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.

அதன்படி, 101வது ஆஸ்கர் விருது விழா பீக்காக் தியேட்டர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் ஹாலிவுட் பகுதியிலிருந்து சுமார் 14.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், டால்பி தியேட்டரை விட அதிக இருக்கை வசதிகளை கொண்ட பெரிய அரங்கமாக இது விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading