கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

கார்த்திக் சுப்புராஜ்-ன் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும், ராணா டகுபதி உடைய ஸ்பிரிட் மீடியா நிறுவனமும் இணைந்து நீளிரா திரைப்படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா மற்றும் விது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

இலங்கையில் போர் சூழ்நிலையின் நடுவே நடைபெறும் ஒரு திருமணத்தை மையமாகக் கொண்டு, அதனால் உருவாகும் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிகளை இந்த திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘கல்யாண பைலா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.

இந்நிலையில், ‘நீளிரா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading