மகாபாரதத்தின் முக்கியமான கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து ‘தி லெஜெண்ட் ஆஃப் கர்ணா’ என்ற அனிமேஷன் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. கிராஃபிக் இந்தியா தயாரிப்பில் சரத் தேவராஜன் மற்றும் ஜீவன் ஜே காங் உருவாக்கத்தில் இந்தத் தொடர் உருவாகியுள்ளது. கர்ணனின் பிறப்பு முதல் துரியோதனனுடனான நட்பு, சமூகத்தில் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் இறப்பு வரை பல்வேறு நிகழ்வுகளை இந்தத் தொடரில் காண்பிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அனிமேஷன் தொடர் ஜூலை 31 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
—
