தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியீடு!

விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள கர திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், ப்ரித்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், 1990களில் நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் ஆக்சன் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவை படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ‘கர’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், ஜெயராம், ப்ரித்வி பாண்டியராஜன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இதற்கு முன்பு தனுஷ் நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தையும் இந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading