சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்து வரும் புதிய திரைப்படம் தற்போது தலைப்பு வைக்கப்படாமல் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பாரத் மற்றும் சான்வே மேக்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
குடும்பஸ்தன் திரைப்படத்திற்குப் பிறகு சான்வே மேக்னா நடிக்கும் படம் இதுவாகும். ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின்னர் அவருக்கு பொருத்தமான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், இந்த திரைப்படம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
