நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். மேலும், யாஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் தொடர்பான எந்த தகவலும் வெளியேறாத வகையில், கடுமையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ராமர்’ கதாபாத்திரத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வீடியோ வருகிற 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
