ப்ரோ -2 கதை ரெடி… பவன் கல்யாண் அவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன் – இயக்குனர் சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிஸியான நடிகராக மாறி, தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவர் இயக்குநர் பணியில் இருந்து தற்காலிகமாக ஓரளவு இடைவெளி எடுத்துள்ளார் என்று கூறலாம்.

இதற்கிடையில், 2021ஆம் ஆண்டு தமிழில் தம்பி ராமையா நடித்த வினோதய சித்தம் திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. அந்தப் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததால், பவன் கல்யாண் அதனை தெலுங்கில் தன்னை வைத்து இயக்குமாறு சமுத்திரக்கனியிடம் கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு பவன் கல்யாண் மற்றும் சாய் துர்கா தேஜ் நடித்த ப்ரோ திரைப்படமாக இது ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் கதையின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையையும் சமுத்திரக்கனி எழுதி முடித்துள்ளார். இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது என்றும், பவன் கல்யாண் அவர்களின் ஒப்புதலை காத்திருக்கிறேன் என்றும், விரைவில் வெளியாக உள்ள கார்மேனி செல்வம் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading