ரசிகர்கள் நடிகர்களை விமர்சிக்க முழு உரிமை கொண்டவர்கள்…. நடிகர் அபிஷேக் பச்சன் OPEN TALK!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவியும் பிரபல இந்திய திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டுள்ளது என்ற வதந்திகள் நீண்டகாலமாக பரவி வந்தன. ஆனால் தற்போது அந்த வதந்திகள் முழுமையாக அடங்கியுள்ளன. இந்நிலையில், தன்னை நோக்கி வரும் விமர்சனங்கள் குறித்து அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “விமர்சனம் என்ற சொல்லை நாம் பல நேரங்களில் தவறாக புரிந்து கொள்கிறோம். அது எப்போதும் எதிர்மறையான ஒன்றாகவே இருக்கும் என எண்ணி விடுகிறோம்.

ஆனால் அது சரியான அணுகுமுறை அல்ல. கலைத் துறையில் உள்ளவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு திரைப்படங்களை பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் நம்மை விமர்சிக்க முழு உரிமை கொண்டவர்கள். அந்த விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வது மிக முக்கியம்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading