‘பெத்தி’ பட பாடலுக்கு நடனமாடியுள்ள மூன்று பிரபல கதாநாயகிகள்!

தெலுங்குத் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தப் படத்திற்குப் பிறகு, தனது அடுத்த திரைப்படத்தில் வெற்றியைப் பெற வேண்டும் என்ற உறுதியுடன், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் மூலம் புகழ்பெற்ற திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்காக மூன்று நடிகைகள் இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த பாடலுக்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பாடலில் நடித்த நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்தப் பாடலில் நடனமாடியுள்ள பூஜா ஹெக்டே அவர்களுக்கு ரூ.4 கோடி, மிருணாள் தாகூர் அவர்களுக்கு ரூ.3 கோடி, ஆயிஷா கான் அவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலுக்கான செட் அமைப்பிற்கே மட்டும் ரூ.5 கோடி செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading