ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், அரண்மனை 4, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ரவுடி அண்ட் கோ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தெலுங்கில் அவர் நடித்த தெலுசு கடா திரைப்படம் ஏற்கனவே எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பவன் கல்யாண் உடன் நடித்த உஸ்தாத் பகத்சிங் திரைப்படமும் தோல்வியடைந்துள்ளது.
இதன் விளைவாக, ராஷி கண்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த இரண்டு புதிய திரைப்படங்கள் தற்போது கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், அவர் தற்போது ஹிந்தி திரையுலகில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
