ரசிகர்களின் மனதில் நான் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி – நடிகை ஷில்பா மஞ்சுநாத்!

நடிகை ஷில்பா மஞ்சுநாத் எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், வெப், சிங்கப் பெண்ணே, சென்னை பைல்ஸ் முதல் பக்கம், வா வாத்தியார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் அவர், சமீபத்தில் பகிர்ந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அவர் கூறியதாவது, தனது ஆண் ரசிகர்களுக்கு அவர்களின் காதலிகள் அல்லது மனைவிகளால் பிரச்சனைகள் உருவாகின்றன என்பது குறித்து கேள்விப்பட்டதாக தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் தன்னுடைய திமிர் கலந்த அழகைக் கண்டு, “இவர் என் முன்னாள் காதலி போன்றவர்” என்று ரசிகர்கள் தங்களது மனைவிகள், காதலிகள் அல்லது பெண் நண்பர்களிடம் கூறுவதாகவும், அதுவே சில சமயங்களில் அவர்களுக்கு சிக்கலாக மாறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் தன்னை சந்தித்த ஒரு ரசிகர், அவரது மனைவி தன்னை மிகவும் வெறுப்பதாக கூறியதாகவும், அவர் கூறியதாக தெரிவித்துள்ளார். அந்த ரசிகர் தன்னை இன்ஸ்டாகிராம் தளத்தில் பின்தொடர முயற்சித்தால், உடனடியாக அவரது மனைவி அதைப் பின்தொடர்வதை நிறுத்திவிடுவதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த அனுபவங்கள் ஆச்சரியத்தை அளித்தாலும், ரசிகர்களின் மனதில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading