ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான மேட் இன் கொரியா திரைப்படம், திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக Netflix ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்தின் கதைக்களம், தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த கதாநாயகியான பிரியங்கா மோகன், கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டு அங்கு எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘பீல் குட்’ பாணியில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் ஓடிடி வெளியீட்டிலேயே சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, தமிழில் வெளியாகிய வெற்றிகரமான நெட்பிளிக்ஸ் திரைப்படங்களில் ஒன்றாகப் பெயர் பெற்றுள்ளது. மேலும், Netflix தளத்தில் உலகளவில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று, 54 நாடுகளில் தொடர்ந்து டிரெண்டிங் நிலையில் இருந்துள்ளது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் அவர்களின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றதால், அவருக்கான ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமைந்துள்ளது.
