தெலுங்கு தெரியுமா என கேட்டார்கள்? மொழி என்பது சினிமாவிற்கு தடையாக இல்லை, கதை தான் முக்கியம் என்றேன்- கென் கருணாஸ்!

கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமான ‘யூத்’ திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.28.3 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிம்பு, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான முன்வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய கென் கருணாஸ், தமிழில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தெலுங்கு மக்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் பேசுகையில், ஒருமுறை என் நண்பன் `உன் படம் தெலுங்கில் வெளியாகுமா?’ எனக் கேட்டான், `ஆம் வருகிறது’  என்றேன்.`உனக்கு தெலுங்கு தெரியுமா?’ என்று கேட்டான், `இப்போதுதான் கற்றுக் கொள்கிறேன், ஆனால் புரியும்’ என்றேன். `உனக்கு தெலுங்கு தெரியாது, ஆனால் தெலுங்கு மார்க்கெட்டில் வர விரும்புகிறாயா?’ என்றான். `இது தெலுங்கு மார்க்கெட் சம்பந்தப்பட்டது இல்லை, மொழி என்பது சினிமாவிற்கு தடையாக இல்லை, கதை தான் முக்கியம் என்றேன் என கூறியுள்ளார்.தெலுங்கு மொழியை தானும் கற்றுக் கொண்டு வருவதாகவும், அங்குள்ள மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading