திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை காண ஆவலுடன் இருக்கிறேன் திரிஷ்யம் பட நடிகை ஆஷா சரத்!

மலையாள திரையுலகில் இயக்குநர் ஜித்து ஜோசப் மற்றும் நடிகர் மோகன்லால் கூட்டணியில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தற்போது, அந்த தொடரின் மூன்றாவது பாகம் உருவாகி வருகிறது.

முதல் பாகத்திலேயே கதாநாயகி மீனாவை விட, ஐபிஎஸ் அதிகாரி கீதா பிரபாகர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். கடந்த இரண்டு பாகங்களிலும் முக்கிய பங்காற்றிய அவர், இந்த மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார்.

ரசிகர்களைப் போலவே, இந்த மூன்றாம் பாகத்தை காண தானும் ஆவலுடன் இருப்பதாக ஆஷா சரத் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தனது கணவருடன் துபாயில் வசித்து வரும் அவர், அங்கு ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அவரது மகள்கள் வெளிநாட்டில் கல்வி கற்று வந்த நிலையில், அவர் மட்டும் படப்பிடிப்புகளுக்கும் விழாக்களுக்கும் அவ்வப்போது துபாயிலிருந்து கேரளா வந்து சென்றார். சமீபத்தில் ஜெயராம் உடன் நடித்த ‘ஆசைகள் ஆயிரம்’ திரைப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் வெளியீட்டைஆஷா சரத். ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading