பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அக்ஷய் குமார், 1991ஆம் ஆண்டு வெளியான “சௌகந்த்” திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தனது ஆரம்பகாலத்தில் பல சவால்களையும் கடந்து வந்த அவர், தொடர்ந்து உழைப்பின் மூலம் இன்றைக்கு முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது உடற்தகுதி ரகசியத்தை பகிர்ந்துகொண்ட அக்ஷய் குமார், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான முக்கிய ஆலோசனையையும் வழங்கியுள்ளார். அதில், “நான் எப்போதும் சொல்லும் ஒன்று என்னவென்றால், சூரியன் மறைவதற்கு முன்பே, குறிப்பாக மாலை 6.30 மணிக்குள் இரவு உணவை முடித்து விட வேண்டும். இதைவிட சிறந்த வழிமுறை வாழ்க்கையில் இல்லை; இதை மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக குறுக்குவழிகளை நாடாமல், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ற உணவு மற்றும் பழக்கவழக்கங்களை புரிந்து கொண்டு செயல்படுவது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். உடற்தகுதி என்பது உடனடி உணவுகளை தரும் ஒன்றல்ல. அது தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
