மலையாள திரையுலகில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடித்த ‘திரிஷ்யம் 1’ மற்றும் ‘திரிஷ்யம் 2’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதனுடன், இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி மறுஉருவாக்கப் பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.
முதலில், ‘திரிஷ்யம் 3’ மலையாள பதிப்பு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என திட்டமிடப்பட்டது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகங்களில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, மலையாள திரைப்படங்களுக்கு முக்கிய சந்தையாக உள்ள அந்த பகுதியை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தேதியில் வெளியீடு செய்ய இயலாது என படக்குழு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் தற்போது வரும் மே 21ஆம் தேதி, நடிகர் மோகன்லாலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
