‘பெத்தி’ படத்துடன் மோதுகிறதா தயாரிப்பாளர் தில் ராஜூவின் ‘காயப்பட்ட சிம்ஹம்’ ?

தெலுங்கு திரையுலகில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆரம்ப கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இயக்குநர் தருண் பாஸ்கர், ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர். இயக்குநராக மட்டுமன்றி, நடிகராகவும் சிறிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து தோன்றி வந்தார். தற்போது, அவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘காயப்பட்ட சிம்ஹம்’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிடுகிறார்.

இந்த நிலையில், படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய தில் ராஜு, இந்த திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக ஒரு நிபந்தனையை வெளிப்படையாக தெரிவித்தார். அதாவது, ஏப்ரல் 30ஆம் தேதி ராம் சரண் நடித்த ‘பெத்தி’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் தாமதமாகும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு தான் ‘காயப்பட்ட சிம்ஹம்’ திரைப்படத்தை மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். ஒருவேளை ‘பெத்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என உறுதியாக இருந்தால், மே 1ஆம் தேதி இந்த படத்தை வெளியிட மாட்டேன் என்றும் தெரிவித்தார். காரணம், திரையரங்குகள் போதுமான அளவில் கிடைக்காது என்பதுதான். அப்படியான சூழலில், ஒரு வாரம் தாமதித்து வெளியிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என அதிக எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம் என்று முன்னெச்சரிக்கையாக கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply