நடிகர்கள் ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதை எம்.ஜி.ஆர் மட்டும் தான் நிரூபித்துள்ளார் – நடிகர் சிவகுமார் டாக்!

தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான சிவகுமார் தற்போது ஓவியம் மற்றும் கலை தொடர்பான துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திரைத்துறை மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்கும் அவர், மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர்கள் ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் நிரூபித்தார். அவரைப் போன்ற நடிகர் இனி பிறப்பது அரிது. ரொனால்ட் ரீகனுக்கு முன்னரே நாட்டை ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஆனால் அவருக்கு வாரிசுகள் இல்லை. மூன்று மனைவிகள் இருந்தபோதிலும் அவருக்கு குழந்தைகள் இல்லை.

உலகில் சிறந்த நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அவரைப் போன்ற திறமையுள்ள நடிகர் மீண்டும் பிறப்பது சாத்தியமற்றது. ஆனால் அத்தகைய பெரிய நடிகராலும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவென்றால், அனைவருக்கும் எல்லாம் கிடைப்பது இல்லை. நீங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கடவுள் அளிப்பதை ஏற்றுக்கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருக்க வேண்டும். நான் கூட காமராஜர் காலத்திலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading