பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘அரசன்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், விக்ராந்த், யோகலட்சுமி, மாஸ்டர் கமலேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில், ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற டிஜே அருணாசலம் இணைந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் அவர் இப்படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்பு சிம்புவுடன் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடிகர் டிஜே அருணாசலம் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
