கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ தீபாவளிக்கு வெளியாகும்… அப்டேட் கொடுத்த இயக்குனர் தமிழ்!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. தற்போது இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சார்தார் 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல், ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி தனது 29-வது திரைப்படமான  ‘மார்ஷல்’‌ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் கடலை பின்னணியாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது என கூறப்படுகிறது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, வில்லன் வேடத்தில் நிவின் பாலி நடிக்கிறார். மேலும், தெலுங்கு நடிகர் நானி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. 1960 காலப்பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த கேங்ஸ்டர் திரைப்படம் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இதற்கிடையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதுடன், இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ‘மார்ஷல்’ திரைக்கு வரும் என இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் தமிழ் எழுதிய ‘சிறை’ திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading