அட்லி – அல்லு அர்ஜுனின் ‘AA22XA6’ படத்தில் நடிக்கிறாரா பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா?

இயக்குநர் அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுனை முன்னணியாகக் கொண்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘AA22XA6’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிகை தீபிகா படுகோன் நடித்துவருகிறார். இதற்கான அறிவிப்பு காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இந்த படத்தில் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா, 2018ஆம் ஆண்டு வெளியான ‘ஜீரோ’ திரைப்படத்தில் கடைசியாக கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் திரையுலகில் செயற்பட ஆரம்பித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆவலை உருவாக்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading