திரைத்துறையில் வெற்றிகரமான 49 ஆண்டுகள்…’Hi’ படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகை ராதிகா!

இந்திய திரையுலகின் கலை அரசியான ராதிகா சரத்குமார், நடிகையாக மட்டுமன்றி தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாகவும் பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாய்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் கவின் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் சினிமா பயணத்தில் 49வது ஆண்டை எட்டியதை முன்னிட்டு ‘ஹாய்’ படக்குழுவினர் சிறப்பு கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். கேக் வெட்டி கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்த சர்ப்ரைஸ் நிகழ்ச்சியை நடிகை நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, கேக் வெட்டி வாழ்த்திய நயன்தாரா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “வாழ்க்கையில் உண்மையான வெற்றி என்பது நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கிடைக்கும் அன்பே” என்று உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading