‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி, அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் ராதிகா, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் சூர்யா தனது கையில் ஒரு சிறிய குழந்தையுடன் இருக்கும் காட்சி இடம்பெற்றது. அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீசரில் சூர்யா ‘சஞ்சய் விஸ்நாத்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். துப்பாக்கி சுடும் வீரராகவும் 40 வயதை கடந்த நபராகவும் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை காதலிக்கும் குறும்புத்தனமான 20 வயது இளம்பெண்ணாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
அதே நேரத்தில் முதல் பார்வை வெளியான போது டீஸரில் இடம்பெற்ற குழந்தை தொடர்பான விஷயம் டீசரில் இடம்பெறவில்லை. அந்த அம்சத்தை படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
